ஆணைக்குழு அறிக்கை பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, மற்றும் பரிந்துரைகள், தற்போது முழுமையான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமையவில்லை அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புவமாகவும் அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக கால அவகாசத்தை கோரி, காலம் கடத்தி வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி ஜோன் சீ. மாரிஸ் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் எதனையும் ஆணைக்குழு இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகயானது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும், குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையை வலியுறுத்தும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
- மனித உரிமை கவுன்சிலுக்கு பாதிரிமார் கடிதம்
- ஜெனிவா தீர்மானத்தில் விட்டுக்கொடுக்க அடியோடு மறுத்துவிட்டது வொஷிங்டன்
- கூட்டமைப்பின் செயற்பாடுகளே சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமாக உருவெடுத்துள்ளது




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


