தமிழினிக்குத் தொடர்ந்து விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை ஏப்ரல் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர். குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ள இரகசியப் பொலிஸார் எனினும் சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட மா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை கூறினர். வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்:
- தமிழினிக்கு தொடர்ந்து விளக்கமறியல்
- கோடீஸ்வர மோசடிகார உக்கிரைன் பிரஜைக்கு விளக்கமறியல்
- பியசேனவை நீக்குவதற்கு இடைக்காலத் தடை
- குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தங்கள்
- விபசார நாயகி ஜீனா மேடத்தின் விளக்கமறியல் நீடிப்பு




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


