அஹிம்சாவாதி சிலை மீது வன்முறை
மட்டக்களப்பு நகரில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாகக் காணப்பட்ட அண்ணல் மகாத்மா காந்தியினதும் (காந்தி சதுக்கம்) மற்றும் சாரணிய தந்தை பேடன் பவலினதும் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு (05) சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த இரு சிலைகளினதும் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் பதற்றநிலை தோன்றியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்றதுடன் இந்த வன்செயல்களுக்குத் தமது கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.படம்: அததெரண தமிழ்
தொடர்புடைய செய்திகள்:
- எல்லா நாம்பனும் ஓடுகிறது என்று வயிற்று நாம்பனும் ஓடிய கதைதான்
- இலங்கையில் ஜனநாயகக் கட்சியென்று சொல்லும் தகுதி கூட்டமைப்புக்கு மட்டும்தான் உண்டு
- தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைப் பயணம் தொடரும்
- வடக்கு, கிழக்கு இணைப்பு நிராகரிப்பு
- கூட்டமைப்பின் செயற்பாடுகளே சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமாக உருவெடுத்துள்ளது





Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


