சரத் பொன்சேகா தற்காலிக விடுதலை


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தற்காலிக விடுதலை வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த மாதம் 26 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பான மேன்முறையீடு வரும் மே 2 ஆம், 3 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய படைச்சிப்பாய்களை சட்டவிரோதமான முறையில் தம்முடன் வைத்துக்கொண்ட குற்றச்சாட்டுக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் பிணை வழங்கப்பட்டால், தற்காலிகமாக சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சட்டத்தரணி லந்துவேஹெட்டி தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா சார்பில் சட்டத்தரணி லந்துவேஹெட்டி ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு மூன்றரை வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 26 ஆம் திகதி முதல் அந்தத் தண்டனை காலம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையேனும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி லந்துவேஹெட்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நீதிமன்றம் நியாயம் வழங்கும் என எதிர்பார்ப்பதாக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. சரத் பொன்சேகா விடுமுறையை நிராகரித்துள்ளார்
  2. சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனைக்காலம் விரைவில் நிறைவு
  3. ஹைகோப் வழக்கிலிருந்து சரத் பொன்சேகா விடுவிப்பு
  4. பொன்சேகா விடுதலைக்குப் புதிய திட்டம்
  5. சரத் பொன்சேகா சிறையிருக்கும் வரையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை – அர்ஜூன

Comments are closed.