சரத் பொன்சேக்கா சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு!


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை ஆணையாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்‌ஷ இன்று (25) உத்தரவிட்டார்.

இதன்படி சரத் பொன்சேக்கா கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலையின் 6 ‘ஏ’ இலக்க வாட்டில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார்.

சரத் பொன்சேக்காவின் பிரத்தியேக மருத்துவரான வஜிர தென்னகோன், பொன்சேக்காவிற்கு ஏற்பட்டுள்ள சுகயீனத்தை விளக்கியுள்ளதுடன் இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக பொன்சேக்காவின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை ஆராய்ந்த நீதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 10 இராணுவச் சிப்பாய்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கி, சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. ஹைகோப் வழக்கிலிருந்து சரத் பொன்சேகா விடுவிப்பு
  2. சரத் பொன்சேகா தற்காலிக விடுதலை
  3. சரத் பொன்சேகா விடுமுறையை நிராகரித்துள்ளார்
  4. பதுமனை பூஸாவுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு!
  5. சரத் பொன்சேகாவை பிணையில் விடுதலை செய்ய முயற்சி

Comments are closed.