சிலோன் ஒக்சிஜனின் புதிய இணையத்தளம்


லீண்டா குரூப்பின் உறுப்பினரான சிலோன் ஒக்சிஜன் உத்தியோகபூர்வமாக தனது கம்பனியின் புதிய இணையத் தளமான www.linda.lk என்பதை கம்பனியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மட்டக்குளியில் மார்ச் 30, 2012 இல் ஆரம்பித்து வைத்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவ்விணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த சிலோன் ஒக்சிஜன் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகா நிறன் பீரிஸ் குறிப்பிடுகையில், “இது கம்பனியின் சரித்திரத்தில் ஒரு மைல்கல் எனவும் தற்போது அதிகளவு கேட்போர்களை அடையக் கூடியதாகவுள்ளது” எனவும் கூறினார்.

இப் புதிய இணையத்தளத்தின் மூலம் இலங்கையில் தற்போதுள்ள புதிய வாடிக்கையாளர்களை மட்டுமன்றி அதன் தாய் கம்பனி மூலம் கம்பனியின் பல்வித உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் அறிவிக்க முடியும்.

லிண்டா குரூப் உலகின் பல பாகங்களிலும் 100 க்கு மேற்பட்ட நாடுகளிள் செயற்படுகிறது. நாட்டின் துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சியில் பல சர்வதேச கம்பனிகள் இலங்கையில் மூலதனமிடுகின்றன. அவர்களுக்கு சிலோன் ஒக்சிஜன் போன்ற முன்னோடி, சர்வதேச தரத்தைக் கடைப்பிடிக்கும் நம்பிக்கையான வாயு வழங்குனர் தேவைப்படுகிறது என பீஸ் கூறினார்.

எமது செயற்பாடுகளில் பாதுகாப்பு க்கிய இடம் வகிப்பதால் வாயுவை பாதுகாப்பாக கையாளுவதற்கான அறிவுரைகள் போன்றவை பற்றி விவான தகவல்களை எமது வாடிக்கையாளர்கள் இவ் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என பீரிஸ் கூறினார்.

சிலோன் ஒக்சிஜன் தனது தாய்க் கம்பனியான லிண்டா குரூப்பின் ஒத்துழைப்புடன் நாட்டில் கைத்தொழில் வைத்தியத்துறை வாய்ப்புக்களை வழங்கும் ஒரு முன்னோடி நிறுவனமாகும். “மதிப்புக்குரிய எமது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்கி அதனால் உன்னத விளைவுகளை ஏற்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்” என பீரிஸ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. தலவத்துகொடவில் புதிய ஹேமாஸ் வைத்தியசாலை
  2. குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தங்கள்
  3. சீனாவில் ராணுவ புரட்சியா? இணையத்தளம் முடக்கம்
  4. கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் நயன்தாரா
  5. பொன்சேகா விடுதலைக்குப் புதிய திட்டம்

Comments are closed.