இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு எதிராக சுவரொட்டி


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலங்கைத் தமிழரசுக கட்சியின் மாநாட்டைக் கண்டித்து மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன், இம்மாநாட்டிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் கூட்டமைப்பு அதிருப்தியாளர்களெனத் தெரிவித்து இத்துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கறுப்புக்கொடிகள் மட்டக்களப்பு நகரின் சந்தி சுற்றுவட்டம் மற்றும் நகரின் வீதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்:

  1. பொன்சேக்காவிற்கு எதிராக கொழும்பு நகரில் சுவரொட்டிகள்
  2. வவுனியாவில் கிலி! புலிகளுக்கு ஆதரவாக, எதிராக சுவரொட்டிகள்! (படங்கள்)
  3. அஹிம்சாவாதி சிலை மீது வன்முறை
  4. எல்லா நாம்பனும் ஓடுகிறது என்று வயிற்று நாம்பனும் ஓடிய கதைதான்
  5. ”எமக்கு தமிழீழம் வேண்டாம்” யாழில் சுவரொட்டிகள்

Comments are closed.