இலங்கை மெய்வல்லுநர் சம்மேளன செயலாளர் பதவியில் கடற்படை அதிகாரி


இலங்கை மெய்வல்லுநர் சம்மேளன செயலாளராக கடற்படை அதிகாரி தெரிவுசெய்யப்படடார்

இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் உயர் பதவிகளுக்கான தேர்தலில் இலங்கைக் கடற்படையின் ரியல் அட்மிரல் ஷேமால் பெர்னாண்டோ செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க சம்மேளன உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இம்முறை மெய்வல்லுநர் சம்மேளன தேர்தலில் ஆறு உப தலைவர்கள் பதவிக்கு 14 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று (03) நடைபெற்ற மெய்வல்லுநர் சம்மேளனத் தேர்தலில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சுகத் திலகரத்ன தோல்வியடைந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக செயலாளர் ஷர்ஷ அபேகோன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
  2. ஜார்க்கண்ட்: செக்ஸ் புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி நீக்கம்
  3. ”தனிநாடு அமைப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கம்” என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்!
  4. லஞ்ச வலையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி
  5. இலங்கை மீது கருணாநிதி சீற்றம்

Comments are closed.