ஒபாமா சென்ற சில மணி நேரத்தில் குண்டு வெடிப்பு
அமெரிக்க அதிபர் ஒபாமா சென்ற சில மணி நேரங்களில் ஆப்கானில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஹமீட் கர்சாயை சந்தித்தார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ஆப்கான் போருக்குப் பிறகு ஒரு புதிய அத்தியாயம் தொடங்க அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றார்.
இதில் ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் 2014ல் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு புதிய எதிர்காலம் உருவாகும் என்றார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு காபூல் நகரில் இன்று தற்கொலை படை நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதே போன்று ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் உள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் பலியானதாக தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்:
- நைஜீரியா: தேவாலயத்தில் வெடிகுண்டு – 15 பேர் பலி
- பூகம்பம் தாக்கிய மெக்சிகோவில் சிக்கிய ஒபாமா மகள்
- நைஜீரியா குண்டு வெடிப்பில் 50 பேர் பலி
- தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!
- 48 மணி நேரத்தில் 11 பேர் பலி




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


