கிண்ணியாவில் நிலத்திலிருந்து சுமார் 3 மணி நேரமாக புகை மேலெழும்பியது


திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு என்ற மைதானத்திற்கு அருகில் நிலத்தடியிலிருந்து புகை வெளியாகியுள்ளது.

குறித்த இடத்திலுள்ள வீட்டின் உரிமையாளர் இன்று (04) காலை 11.00 மணியளவில் கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக குழி தோண்டிய போது, புகை வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டு வளாகத்திலுள்ள மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களாக புகை வெளிவந்துள்ளது.

நிலத்திலிருந்து திடீரென புகை வெளியாகியமையால் இந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மக்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி அல்லது இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் உத்தியோகபூர்வமான அறிவிப்பெதனையும் இதுவரை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

  1. குழந்தைகளின் பராமரிப்பைக் கோரும் தமிழ் பெற்றோர்
  2. முதலமைச்சர் அலுவலக வாகனம் மோதியதால் ஒருவர் உயிரிழப்பு
  3. 250 மில்லியன் கப்பம் அல்லது கொலை: பிரதியமைசச்ர் மிரட்டல்
  4. உயிருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஆளும் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை!
  5. யுவதியைக் கடத்தி இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம்: ஆளுந்தரப்பு அரசியல்வாதி கைது

Comments are closed.