சீரற்ற காலநிலையினால் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!
சீரற்ற காலநிலையினால் ஆறு மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண் சரிவு அபாயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரிவு அதிகாரி ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ, கொரளை பிரதேசத்திலும் களுத்துறை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, தெரணியகல, எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் நிலவுவதாக நிலையம் குறிப்பிடுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை பெல்மதுல்ல இரத்தினபுரி, கலவான ஆகிய பகுதிகளிலும் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய உள்ளிட்ட சில பகுதிகளிலும் கடும் மழையை அடுத்து மண் சரிவு ஏற்படலாம் என ஆர்.எம்.எஸ். பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
- டெங்கு அபாய வலயங்கள் பட்டியல்
- மிதிவெடிகள் அபாயம் நீங்க இன்னும் காலம் எடுக்கும்
- புலிகளால் கிலி: திருமலையில் மீண்டும் தேடுதல் வேட்டை
- ஆளும் கட்சி அரசியல்வாதியொருவர் கடத்தப்பட்டார்
- இனாமலுவே தேரருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – ஜனக்க




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


