தடையையும் மீறி ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்


ஈரான் தன்மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி 550 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.

சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை ஈரான் கடந்த 3 ஆண்டு காலப் பகுதியில் இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கான ஆயுத விநியோகம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது உறுப்பு நாடுகளை எச்சரித்திருந்தது.

எனினும் 2007 முதல் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தடைகளை மீறி ஈரான் சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை வாங்க முடிந்துள்ளதாக ஒக்ஸ்பம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யா, சீனா கொடுத்த அழுத்தத்தினாலேயே ஐ.நாவினால் முழுமையான தடையை விதிக்க முடியாமல் போனதாகவும், அவ்விரு நாடுகளுமே ஈரானுக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தர்களாக இருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது.

இதேவேளையில் அசர்பைஜான் குடியரசானது 2000 – 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 450 மில்லியன் பவுண்டுகள் பெறுமான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

  1. ஈரான் தேர்தலில் மதத் தலைவர் கமேனிக்கு பெரும் வெற்றி
  2. இலங்கைக்கு பிரித்தானியா ஆயுத விநியோகம்: கூட்டத்தில் கண்டனம்
  3. ஈரான் அணுவாயுதத் திட்டம்: ஈராக்கில் மே மாதம் பேச்சு
  4. அத்துமீறல்கள் அனைத்தையும் மீறி ம.தி.மு.க. நிச்சயமாக வெற்றிபெறும்
  5. விற்பனைக்கு தயாராகும் மைக்கேல் ஜாக்சன் வீடு

Comments are closed.