தேசியக் கொடியை ஏந்தியத்திற்கு மன்னிப்புக்கோர வேண்டிய தேவையில்லை – சம்பந்தன்


ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. எங்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய தேவை எவருக்கும் இல்லை
  2. அரசுடன் பேசுவதற்கு மத்தியஸ்தர் தேவையில்லை என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு
  3. புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி!
  4. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் முடிவே குழப்பத்திற்கு மூல காரணம்
  5. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ரணில்

Comments are closed.