தொடர்பாடல் படையணியை உருவாக்கும் ஐக்கிய தேசியக் கட்சி
நாட்டின் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளை மையப்படுத்தி தொடர்பாடல் படையணியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சித் திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்முதற்கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு தொடர்பாடல் இணைப்பதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இரண்டாம் கட்டமாக மேலும் 10 ஆயிரம் பேர் அடங்கிய தொடர்பாடல் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மூன்றாம் கட்டமாக ஒரு லட்சம் பேர் இந்தப் படையணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார்.
ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தகவல்களைப் பரப்பும் நோக்கில் இந்தத் தொடர்பாடல் படையணி உருவாக்கப்படுகிறது. முதல்கட்டமாக நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக்கு கருத்தரங்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகத்தில் நாளை (18) நடைபெறவுள்ளதாக மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்:
- நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு
- புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி!
- ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ரணில்
- ”தனிநாடு அமைப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கம்” என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்!
- புதிய பரிமாணத்துடன் ”ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ்” இணையத்தளம்!




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


