பாடசாலை கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம்


பாடசாலை கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக பாடசாலை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

15 வயதிற்கும், 17 வயதிற்கும் உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் புதிய பவர்பிளே விதிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தற்போது, போட்டின் முதல் 15 ஓவர்கள் பவர்பிளே விதிமுறை கட்டாயமானதாகும். எனினும், புதிய சட்டத்தின்படி முதல் 10 ஓவர்கள் மாத்திரமே பவர்பிளே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக துடுப்பாட்ட வீரர்களும், பந்துவீச்சாளர்களும் குறைந்தது 05 ஓவர்களைக் கட்டாயம் வீச வேண்டும் எனவும் இதன்மூலம் வீரர்களுக்கு தீர்மானம் எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் எனவும் பாடசாலை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் போட்டிகளின் போது ஒருநாளைக்கு 95 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது 90 ஓவர்கள் என மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

  1. பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்
  2. மாலிங்க கிரிக்கெட் ஒப்பந்த்தில் கையெழுத்திடவில்லை
  3. பாடசாலை மாணவர்கள் போதைக்காக ஒருவகை ஹெயார் ஜெல்லை உட்கொள்கின்றனர்
  4. பாடசாலை மாணவியை துஸ்பிரயோகித்த வர்த்தகரின் மகன் தலைமறைவு
  5. ஒரு இறாத்தல் பாண் 50 ரூபா!

Comments are closed.