மேர்வின் சில்வாவின் கட்அவுட் தீவைக்கப்பட்டது!


களனி பழைய வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் கட்அவுட் ஒன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடமும் இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட ஆளும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் சிலருக்கும் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

  1. அமைச்சர் மேர்வினுடன் முரண்பட்டுள்ள பிரதேச சபைத் தலைவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை
  2. மேர்வின் சில்வா, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்
  3. களனிக்கு பிரதேச சபை தேவையில்லை என்கிறார் மேர்வின் சில்வா
  4. உயிருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஆளும் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை!
  5. களனி பிரதேச சபையின் உபதலைவர் வீட்டின் மீது தாக்குதல்

Comments are closed.