யாழ், மட்டுவில் புதிய அரச அதிபர்கள் பதவியேற்றனர்!
யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் இன்று (16) காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் சுந்தரம் அருமைநாயகம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக பணியாற்றி வந்தார்.
அத்துடன், மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் இன்று (16) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார்.
இதுவேளை, யாழ் மாவட்ட அரச அதிபராக பணியாற்றிவந்த திருமதி இமல்டா சுகுமார் அமைச்சொன்றின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனது. எனினும், இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க நாடு திரும்பியதும் அமைச்சின் செயலாளர் பதவியை திருமதி இமெல்டா சுகுமார் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.
தொடர்புடைய செய்திகள்:
- யாழ் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக சிங்களவர்
- மட்டுவில் மினி சூறாவளி : 80 குடும்பங்களை இடம்பெயர்ந்தன
- கொலையாளியை உயிர்பிரியும் வரை தூக்கிலிட யாழ் நீதவான் உத்தரவு
- யாழ். அரச அதிபர் இமெல்டாவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில்
- யாழ். அரச சார்பு ஆர்பாட்டத்துக்கு பலாத்கார ஆட்பிடிப்பு




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


