IPL மோசடி செய்த 05 வீரர்களுக்கு தடை!
ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இம்முறை நடைபெற்று வருகின்ற இந்தியாவின் மிகப்பிரமாண்டமான கிரிக்கெட் தொடராக வர்ணிக்கப்படும் IPL தொடரில் விளையாடும் ஐந்து வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாக சபை தடை விதித்துள்ளது.
புனே பொரியஸ் அணியின் Mohnish Mishra, டெக்கான் சார்ஜஸ் அணியின் TP Sudhindra, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் Amit Yadav, Shalabh Srivastava, Abhinav Bali ஆகிய வீரர்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐவரும் முதற்தர வீரர்களாவர்.
IPL போட்டிகளில் இம்முறை பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சுமத்திய இந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்று அதற்கான சாட்சிகளையும் ஒளிபரப்பியிருந்தது.
இதன்பின்னர் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தை அடுத்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதனடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட ஐந்து வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாக சபை தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
- ஐ.பி.எல். போட்டிகளின் மோசடிகள் அம்பலமானது
- கொழும்பு பங்குச் சந்தை ஊழல், மோசடி நிறைந்த இடம் – ஹர்ஷ டி சில்வா
- கிரிக்கெட்டில் ஐந்து ஓட்டங்களை அறிமுகம் செய்ய முயற்சி
- நாட்டுக்கு அல்லாது IPL இற்கு முக்கியத்துவம் அளிப்பது வருத்தமளிக்கின்றது – அர்ஜூன
- 10,000 ஓட்டங்களைப் பெற்றோர் பட்டியலில் சந்திரபோலும் இணைந்துகொண்டார்




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


