அகதிகள் படகு ஆஸியின் கொகோஸ் தீவுக்கு அருகே விபத்தில் சிக்கியது!


இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம் செய்த அகதிகள் படகு ஒன்று கொகோஸ் தீவுக்கு அப்பால் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தப் படகு இலங்கையில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் படகு கொகோஸ் தீவுகளில் ஒன்றான கீலிங் கரையை அடைய முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்தப் படகில் பயணம் மேற்கொண்ட 32 அகதிகள் கொகோஸ் தீவு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடிப்படை சோதனைகளின் பின்னர், கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது அகதிகள் படகு இதுவாகும்.

நேற்றுக்காலை கிறிஸ்மஸ் தீவுக்கருகே மீட்கப்பட்ட ஒரு படகில் 100 அகதிகளும் 2 படகோட்டிகளும், அஸ்மோர் தீவுக்கருகே மீட்கப்பட்ட படகில் 24 அகதிகளும் 3 படகோட்டிகளும் இருந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

  1. 63 இலங்கையருடன் அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு அகதிப் படகு!
  2. அவுஸ்திரேலியாவிற்கு இன்னுமொரு அகதிப் படகு சென்றது
  3. தமிழ்ப் பயணி மீது பெளத்த பிக்கு தாக்குதல்
  4. வங்கதேசப் படகு விபத்து பலி 110 ஆக உயர்வு
  5. யாழ். அரச அதிபர் இமெல்டாவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில்

Comments are closed.