அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 11 வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு
மத்திய கிழக்கின் பஹ்ரெய்னில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக 11 வயது சிறுவன் ஒருவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி Mohsen al-Alawi தெரிவித்துள்ளார்.
சிறுவன் தற்போது ஆறாம் ஆண்டில் கல்வி பயில்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Ali Hasan என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளான்.
பஹ்ரெய்னில் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடம்பெற்று வரும் போராட்டங்களில் இதுவரையில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்:
- டாக்ஸியில் உறவு கொண்ட பெண்ணுக்கு எதிராக வழக்கு
- 12 வயது சிறுவன் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு
- ஸ்கிறீம் உருவத்தில் மூன்று வயது சிறுவனை பலிகொண்ட மருந்து!
- 13 சிறுவன் 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
- 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 80 வயது கிழவர்!




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


