Nov 12, 2016

நிழல் பொருளாதரத்தை தடுக்குமா இந்திய அரசின் புதிய முடிவு

இந்தியாவில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது...என்று மத்திய அரசு கூறியுள்ளது .


இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை மற்றும் ஆயுத விற்பனை போதைப் பொருள் கடத்தல் உட்பட அனைத்துக்கும்

கள்ள நோட்டுக்கள் தான் காரணமாக அமைகின்றன .

இதனால் இந்தியாவின் பொருளாதரத்தை விட நிழல் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது.
இந்தியாவில் அதிகமாக  புழக்கத்தில் இருப்பவை  500 மற்றும் 1000 ரூபாய்  கள்ள நோட்டுகளே..

2011 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலங்களில் வங்கிகளில் இருந்துவந்த தொகை 40% அதிகரித்து உள்ளது.

அதில் 500 ரூபாய் நோட்டுகள் 76%, 1000 ரூபாய் நோட்டுகள் 109% ஆகவும் அதிகரித்துள்ளதால்

கள்ள நோட்டுகள் மக்கள் மத்தியில் கலந்துவிட்டமை தெரிவதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

அத்தோடு புதிய 2௦௦௦ ருபாய் எளிதில் அச்சிட முடியாத அளவு இருப்பதாக சொல்லப்படுகிறது .
இந்த முடிவு எந்தளவு வெற்றியளிக்கும் என்ற ரீதியில் பரவலான விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ளது .

string(1) "1"
Top