Nov 23, 2016

மின்னால் இயங்கும் சரக்கு வாகனம் Featured

கார்களில் புதிய வடிவங்கள் நாளுக்கு நாள் பெருகும் போது மற்ற வாகனங்களின் வடிவங்களில் மாற்றங்கள் இல்லை.

ஒரு சில நிறுவனங்கள் மட்டும் புதியவகை வாகனங்களில் கவனம் செலுத்தி வருகின்றன .பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் தான் சார்ஜ் .
வித்தியாசமான மின்சார சரக்கு வாகனமொன்றை அண்மையில் உற்பத்தி செய்துள்ளது. வழக்கமான சரக்கு வாகனங்களின் அமைப்பில் இல்லாது பெட்டி உருவில் வடிவமைத்துள்ளனர்.

இந்த வடிவமைப்புக்கு காரணமாக , சில முக்கியமான தொழில்நுட்ப புதுமைகள் இருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறனர்.

இலகுரக உலோகங்களை பாவித்து உருவாக்கியுள்ள இந்த வாகனத்தை, 3.5 டன் முதல் 26 டன் வரை, பல அளவுகளில் உருவாக்கவுள்ளனர் .
வாகனங்களின் கட்டமைப்பில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் , ஒரே ஒரு நபர், நான்கு மணி நேரத்தில், முழு வாகனத்தையும் உருவாக்கிவிட முடியும்.

ஆண்டிற்கு, 10 ஆயிரம் மின் சரக்கு வாகனங்களை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது சார்ஜ்.
இந்த புதிய வாகனங்கள் பற்றி பேசுகையில் 'லாரிகள் சரக்கு வாகனங்கள் என்பவற்றை நம் சுற்றுசூழலை சுத்தமாக, அமைதியாக, பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில்

அதன் தயாரிப்பினை அமைக்கவேண்டும்.

அதற்கேற்ற விதத்தில் சார்ஜ் வாகனம் செயல்படும்' என, அந்நிறுவனத்தின் தலைவரான டெனிஸ் ஸ்வெர்ட்லோவ் அறிவித்திருக்கிறார்

 

 

string(1) "1"
Top