Nov 24, 2016

நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய 3D காலணிகள் Featured

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் போதிய அளவு உணர்ச்சி இருக்காது .


இதனால் கால்களில் காயங்கள் ஏற்பட்டு பாதங்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படக்கூடும் .
ஜெர்மனியை சேர்ந்த, 'பிரான்ஹோபர்' என்ற நிறுவனம் இத்தகைய நீரிழிவு நோயாளிகளுக்கு,

'3டி பிரின்டிங்' எனப்படும் முப்பரிமாண காலணிகளின் அடிப்பகுதியை உருவாக்கி தருகிறது.
நீரிழிவு உள்ளவரின் கால்களை ஒரு, 'ஸ்கேனர்' மூலம் துல்லியமாக அளவெடுத்து, அதை 3டிஅச்சியந்திரத்தில் கொடுத்து

காலணியின் பாதப்பகுதியை உருவாக்குகிறது பிரான்ஹோபர் நிறுவனம் .பின், அந்த பாதத்தின் வடிவத்திற்கேற்ப

காலணியின் உட்பகுதியை லேசர் மூலம் படலம் படலமாக பிரான்ஹோபர் உருவாக்குகின்றனர் .

இந்த காலணியின் உட்பகுதி, நோயாளியின் பாதத்திற்கு ஏற்ப, கன கச்சிதமாக இருப்பதால் உராய்வு மற்றும் அழுத்தம் மூலம்

பாதங்களில் புண் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலணிகளை தேர்ந்த நபர்களைக் கொண்டு வடிவமைக்கின்றனர்.

அதைவிட 3டி முறையில், துல்லியமாகவும், விரைவாகவும் பாதணிகளை தயாரிக்க முடியும் என்கிறது  பிரான்ஹோபர் நிறுவனம்.

bbbb

string(1) "1"
Top