Nov 01, 2016

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “தேனுகா” கந்தராஜாவுடன் ஓர் உரையாடல்

நடிகையாகும் உங்களுடைய விருப்பத்திற்கு உங்களை சுற்றியுள்ள சமூகத்திடமிருந்து என்ன மாதிரியான கருத்துகள் வந்தன? எதிர்மறையான கருத்துகள் வந்ததா?

அனேக இடங்களில் இந்த கேள்விக்கு முகம் கொடுத்திருக்கிறேன் ஆனால் என்னை பொறுத்தமட்டில் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை பாராட்டியும் வாழ்த்தியும் தான் உள்ளார்கள் அப்படியும் ஏதாவது எதிர்மறையான கருத்துக்கள் வரும் பட்சம் எனக்கு எனது குடும்பத்தினர் என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் முதல் முக்கிமானது மற்றும் உற்ற நண்பர்கள். அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியே வந்துள்ளார்கள். எனது அம்மா கர்நாடக சங்கீத ஆசிரியை. சிறுவயதிலிருந்தே என்னை பரதநாட்டியத்தில் உற்சாகப்படுத்தியவர். எனக்கு எது நல்லது எது கெட்டது என்று பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் ஒரு கட்டத்திற்கு நான் இப்பொழுது வந்துவிட்டேன். என் இலக்கினை நானே தீர்மானித்து அதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றேன். நான் என்னவாக போகின்றேன் என்பது பற்றி நான் தெளிவாக இருக்கின்றேன்.
இலக்கினில் தெளிவில்லாதவர்கள் தான் வெளியிலிருந்து வரும் எதிர்வினையான கருத்துகளிற்கு செவி சாய்ப்பர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு எதிர்மறையான கருத்திற்கும். அந்த எதிர்மறையான கருத்துக்கள் எங்களில் தாக்கம் செலுத்த விடுவதா இல்லையா என்பது எங்களில் தான் தங்கி உள்ளது.
 

நடிப்புத்துறையில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.?நான் சமீபத்தில் நடித்த 3 திரைப்படங்களில் தயாரிப்பு பணிகளிலும் செயலாற்றும் வாய்புக்கிடைத்தது.இதன் மூலம் திரைக்கு பின்னால் நடக்கின்ற விடயங்களையும் உன்னிப்பாக அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு நடிகையாக மட்டும் இருக்கும் போது கமராக்குப் பின்னால் நடக்கின்ற பல சுவாரசியமான விடயங்களை தவறவிடுகின்றோம். திரைப்படத்தில் பங்காற்றும் ஏனையவர்களின் கடின உழைப்பை பங்களிப்பை அவர்கள் திரைப்பட உருவாக்கத்தின் மேல் கொண்டுள்ள காதலை பார்க்கும் போது மகிழ்ச்சியாவும் உந்து சக்தியாகவும் இருக்கும். இந்த படங்களில் உலகின் பல இடங்களில் இருந்து வந்த திறமையான கலைஞர்களுடன் பங்காற்றியது அருமையான மறக்க முடியாத அனுபவம்.

 

கமராக்கு முன்னாலோ,மேடையிலோ நீங்கள் சந்தித்த சங்கடமான சம்பவங்கள் பற்றி கூறுங்கள்.

?
கமெராக்கு முன் நின்று நடிப்பது இலகுவான விடயமல்ல. இருந்த போதும் சங்கடமான தருணங்கள் என்பன எனக்கு மேடையிலும் சரி கமராவிற்கு முன்னும் சரி இதுவரை இருந்ததில்லை. சிலவேளைகளில் நகைச்சுவையான சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒரு படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடிக்கவேண்டி வந்ததால் நாள் முழுவதும் பெரிய வயிற்றுடனே சுற்றிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் புதிதாக வந்த ஒரு உதவி ஒளிப்பதிவாளர் 
நான் உண்மையாகவே கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு கனநேரம் நிக்கவேண்டாம் கட்டாயம் இருங்கள் என்று கதிரையிடன் வந்து நின்றார்.


 அந்தச் சம்பவம் நகைச்சுவையாக இருந்தது.

 

என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது உங்களுடைய கனவு?நடிப்பை பொறுத்த வரையில் 
பலவிதமாக கதாபாத்திரங்கள் செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். நடிக்கும் வரை எல்லாமே கனவுதான், என்ன அனேக கனவுகள் நிஐத்தின் அருகில் உள்ளமையால் அவற்றை பெரிய கனவென நினைப்பதில்லை.
ஆனாலும் ஒரு சாகசப் பெண் பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது என்னையே சுவாரஸ்யப் படுத்தும் ஓர் கனவு. உதாரணமாக ஒரு அமானுஷ்ய சக்தி கொண்ட கதாபாத்திரத்தில் தீயசக்திகளை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

.இதுவரை நடித்ததில் உங்களிற்கு பிடித்த கதாபாத்திரம் எது?

“Broken Dreams’’ என்ற சைகோத்ரில்லர் திரைப்படத்தில் Dr Christina Henning என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிஜத்திற்கும் மாய உலகிற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான பெருவெளியை கொண்டிருந்ததும் ஓர் காரணம். இந்த படமும் இத்துடன் நான் நடித்த இன்னொரு படமன “கண்டமும்” விரைவில் ஐரோப்பிய நகரங்களில் திரைக்கு வர இருப்பது மகிழ்வு தரும் விடயம்.

உங்களின் கதாபாத்திரத்தின் வசனங்களை எப்படி மனப்பாடம் செய்கின்றீர்கள்?எப்படி நினைவில் வைத்துக்கொள்கின்றீர்கள்?என்னை பொறுத்த மட்டில் வசனங்களை உடன் உடன் நினைவில் வைத்துக்கொள்வதென்பது கடினமான விடயம்.தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுமளவிற்கு மனப்பாடம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு என்றொரு முறையை வைத்துக்கொள்கிறார்கள். நான் முழுமையாக ஸ்கிரிப்டை புரிந்து கொண்டும் முன் பின் வரக்கூடிய காட்சிகளை தெரிந்து கொண்டும்
 என்னை தயார் படுத்துகிறேன்.

தமிழ்திரைப்படங்கள்தவிர்ந்தவேறுமொழி தொலைக்காட்சிகளில் நடித்தஅனுபவங்கள்உண்டா?
உதாரணமாகஜேர்மன்தொலைக்காட்சிகளில்....?
ஜேர்மன் தொலைக்காட்சியில் சிறுவேடங்களில் நடித்துள்ளேன். கூடுதலாக இந்திய பெண் வேடங்களில் நடித்துளேன். எதிர்காலத்தில் வேறுமாதிரியான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன்

 

 

நன்றி :oodaru.com

string(1) "1"
Top