Nov 01, 2016

பூமியை நோக்கி வரும் எரிகற்கள்

பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றி அலைந்து கொண்டிருக்கும் சில விண்கற்கள், சில நேரங்களில் தடம் மாறி, பூமியை நோக்கி வருவது வழக்கம்.

இவை எரிகற்கள் என்றழைக்கப்படும்.

இவை பெரும் பாறைகளை ஒத்த அளவில் இருந்தால், பூமிக்கு சேதாரம் ஏற்படும்.
நாசா விஞ்ஞானிகள் விண்ணை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த பிரம்மாண்ட எரிகல் பூமியின் மீது விழாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதன் தடம் மாறினால் ஆபத்து என்பதால், அக்கல்லை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதற்கு, நாசாவின் உயர்தொழில்நுட்ப முறையான ஸ்கவுட் கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
விண்ணில் தொடர்ந்து செய்து வரும் ஆய்வுகள் மூலம்,

இதுவரை 15ஆயிரத்திற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றி வருவதை நாசா கண்டறிந்துள்ளது. இவற்றில், கிட்டத்தட்ட 1700 விண்கற்கள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளனர்

string(1) "1"
Top