Nov 01, 2016

புதிய கார்கள்

சாலை நெரிசல் மிக்க நகரங்களில், பெரிய கார்களை ஓட்டிச் செல்வது கஷ்டமாக மாறிவரும் சூழலில் 

ஜப்பானில், ஹோண்டா போன்ற பெரிய கார் நிறுவனங்களே, குட்டி கார்களை 'சிட்டி கார்' என்று தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றன.


 ஹோண்டா கம்பனி 'ஹடோ சப்லே' என்ற குட்டி காரை வடிவமைத்துள்ளது .

மின்சாரத்தில் இயங்கும் இந்த வாகனம், ஒரு மின்னேற்றத்திற்கு 80 கி.மீ., தான் இப்போதைக்கு பயணிக்கும். வாகன ஓட்டி ஒருவர்தான் அமர முடியும்.  

உள்ளே உலோக கட்டுமானம் கொண்ட இந்தக் காரின் வெளிப்புறம் அனைத்துமே முப்பரிமாண அச்சியந்திரத்தில் உருவாக்கப்பட்ட பாகங்கள்தான்.

இதன் உயரம் 1.5 மீட்டர். நீளம் 2.5 மீட்டர். அகலம் 1.2 மீட்டர். எடை, 600 கிலோ.
ஒரு அடுமனையின் தேவைக்கு ஹோண்டாவால் வளைந்துகொடுக்க முடிந்திருப்பதற்கு முப்பரிமாண அச்சு தொழில்நுட்பமே காரணம்.
இதேபோல தனது குட்டி காரின் அடிப்படைகளை அப்படியே வைத்துக்கொண்டு,

மற்ற தேவைகளுக்கேற்ப காரின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மாற்றி உருவாக்கித் தர தயாராகி வருகிறது ஹோண்டா.

string(1) "1"
Top