Nov 01, 2016

தாலாட்டு பாடும் தொட்டில்கள்

தாலாட்டு என்பது ஒரு அருமையான இசை வடிவம் .

ஆனால் இன்றைய பெற்றோருக்கு அது புரிவதில்லை என்று சொல்லப் படுவதோடு அவர்களுக்கு அதற்கு நேரமோ பொறுமையோ இல்லாத நிலையில்

குழந்தைகளை தாலாட்டு பாடி உறங்க வைக்கும் தொட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
குழந்தையின் அழுகை கேட்டவுடன் தானே ஆடி, குழந்தையை துாங்க வைக்கும் தொட்டிலை உருவாக்கியிருக்கிறது, 'பியூஷன் புராஜக்ட்' என்ற வடிவமைப்பு நிறுவனம்.

'ஸ்நுா' என்ற இந்த தொட்டிலில், பெற்றோரின் ஸ்மார்ட் போனுடன் தொடர்பு கொள்ளும் wifi வசதியும் ,

சிறிய மோட்டாரும், ஒரு மின்னணு சர்க்யூட்டும் இருக்கின்றன. இவற்றின் மேல்,

மின்னணு அலைகளை தடுக்கும் கவசம் போன்ற பொருளால், மெத்தை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் குழந்தையை படுக்கவைத்தால் போதும்.
குழந்தை அழும் ஒலியை கேட்க மூன்று ஒலிவாங்கிகள், தொட்டில் ஆட்டும் விசையை துாண்டிவிட,

மெல்ல தொட்டில் ஆட ஆரம்பித்து, மிதமான வேகத்தில் தொட்டில் ஆடுகிறது.

குழந்தை சமாதானமாகி துாங்கியதும் மெல்ல வேகம் குறைந்து, தொட்டில் நின்றுவிடும்.
கைக்குழந்தை உருண்டு கீழே விழ முடியாதபடியும்,

பெற்றோர் குழந்தையை துார நின்றாலும், பார்க்கும் விதத்திலும், 'ஸ்நுா' தொட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .

string(1) "1"
Top