Nov 01, 2016

அமைச்சர் பதவியில் அமர்வாரா, மிச்செல் ஒபாமா? Featured

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் அதிபரும்ஜனாதிபதி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.


‘’உலகம் முழுவதும் கல்வி உள்ளிட்ட பெண்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க போவதாக மிச்செல் தெளிவாக கூறியுள்ளார்.

இது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர் அரசியலில் இடம் பெற எப்போது விரும்பினாலும், அதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். இருவரும் இணைந்து சிறப்பாக பணிபுரிவோம்.

ஆனால், தற்போது அவர் சற்று இடைவெளி எடுக்க விரும்புகிறார் என எண்ணுகிறேன்.

அவர் விரும்பும்போது, முதல் ஆளாக வாய்ப்பு வழங்குவேன். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

அந்த பணி எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் எனக்கூறினார்.
அதிபர் தேர்தலில், ஹிலாரிக்கு ஆதரவாக மிச்செல் ஒபாமா பல இடங்களில் பிரசாரம் செய்துள்மை குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top