Nov 01, 2016

மூன்று லட்சம் அகதிகளை அனுமதிக்க கனடா முடிவு Featured

உலக நாடுகளில் மிகபெரிய சவாலுக்குரிய விடயமாக கருதப்படுவது அகதிகள் பிரச்சினைதான் .


இதன் முக்கிய கட்டமாக கனடா அகதிகள் தொடர்பில் புதியதொரு முடிவினை எடுத்துள்ளது .
கனடா அரசாங்கம்  2017-ம் ஆண்டுக்கான அகதிகளை ஏற்க தயார் என்றும்

கிட்டத்தட்ட  3 லட்சம் அகதிகள் வரை அனுமதிக்க தயார் என்றும்   கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜான் மெக்கலம் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டும் இதே அளவு அகதிகளை தான் அனுமதித்ததாகவும், நாட்டின் மக்கள் தொகை,

பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள் நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அண்மையில் பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் மிகபெரிய சவாலுக்குரிய விடயமாக கருதப்படுவது அகதிகள் பிரச்சினைதான் .

இதன் முக்கிய கட்டமாக கனடா அகதிகள் தொடர்பில் புதியதொரு முடிவினை எடுத்துள்ளது .

கனடா அரசாங்கம் 2017-ம்ஆண்டுக்கான அகதிகளை ஏற்க தயார் என்றும் கிட்டத்தட்ட  3 லட்சம் அகதிகள் வரை அனுமதிக்க தயார் என்றும்  கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜான் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே அளவு அகதிகளை தான் அனுமதித்ததாகவும், நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள் நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அண்மையில் பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
string(1) "1"
Top