Nov 12, 2016

2௦17 வரவு செலவு திட்டத்தில் கல்வித்திட்டங்கள்


நிதி அமைச்சர் ரவிகருணா நாயக்கவினால் அறிமுகம் செய்யப்பட்டது.இத்திட்டம் பற்றிய விமர்சங்கள் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது .

வரவு செலவு திட்டத்தில் பல விடயங்கள் இருந்தாலும் முக்கியமாக கல்வி சார் செயற்பாடுகள் முக்கியமான விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை கட்டியெழுப்ப முனைவதாக கூறப்பட்ட நிலையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது .

  • கல்வி அபிவிருத்திக்காக மேலதிகமாக 17,840 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
  • ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 2௦மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது .
  • 1௦௦௦ பாடசாலைகளின் மின்சாரம் மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தையும் ஏற்படுத்த 3௦௦௦ மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • பாடசாலை வகுப்பறை மற்றும் கட்டிடங்களை கட்ட 21௦௦௦ மில்லியன் ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது .
  • 5-19 வயதுடைய மாணவர்களுக்கு 2 லட்சம் பெறுமதியான காப்புறுதி வழங்கப்படவுள்ளது .
  • 175௦௦௦ உயர்தர மாணவர்களுக்கும் 28௦௦௦ ஆசிரியர்களுக்கும் இலவச TAB வழங்க 5௦௦௦ மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
  • பாடசாலை ரீதியாக 5௦ கணணிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
  • பல்கலைக்கழக விரிவுரை நேரத்தை இரவு 8 மணிவரை நீடிக்கவுள்ளதோடு , பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு கலை போன்ற துறைகளுக்கு 1௦௦ மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
  • தனியார் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பட்டப்படிப்பு வழங்கவும் ,தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 15௦௦௦ மாணவர்களுக்கு 8 லட்சம் வரை கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
  • தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் உயர் பெறுபேறுகளை பெரும் மாணவர்களில் மூவருக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்ட பின் படிப்புக்களை மேற்கொள்ள புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன .
  • சர்வதேச மாணவர்களுக்கு 5 வருடத்துக்கான MULTIPLE ENTRY VISA வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .

 

string(1) "1"
Top