Nov 15, 2016

நியூசிலாந்தை தாக்கிய சுனாமி Featured

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்தின் தெற்கு பகுதியை சுனாமி தாக்கியது.

நவம்பர் 9ம் கிறிஸ்ட் சர்ச் பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், கைகோரா தீவு மிகவும் பாதிக்கப்பட்டது.

அதன் பின், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. பல இடங்களில், சாலைகளில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பீதியில் உறைந்தனர்.

2௦11ம் ஆண்டில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தை விட பாரிய நிலநடுக்கமாக அமைந்துள்ளது என்றும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது .
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தை தொடந்து, நியூசிலாந்தின் தெற்கு பகுதியை, சுனாமி அலைகள் தாக்கின.

குடியிருப்புக்குள் புகுந்த கடல் நீர், சாலையில் நின்றிருந்த பல வாகனங்களையும் அடித்து சென்றுள்ளது.
தற்போது இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதற்கு சூப்பர் மூன் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது .

நிலவின் ஈர்ப்பினால் கடல் அலைகள் பெருக்கெடுப்பதை நாம் அறிவோம் .

இந்த சூப்பர் மூன் தான் சுனாமிக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் சொல்ல இன்னொரு தரப்பினர் மறுத்துள்ளனர் .

நிலக்கீழ் தட்டுகளின் மாற்றமே நிலநடுக்கத்தை தீர்மானிக்கும் .

நிலவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள்ளனர்

string(1) "1"
Top