Nov 17, 2016

வீதி ஒழுங்குவிதி மீறல் தண்டத்தை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டம் ???

2017 பாதீட்டில் போக்குவரத்து ஒழுங்குவிதி மீறல்களுக்கான குறைந்தபட்சத் தண்டத்தை 2,500 ரூபாயாக உயர்த்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது .


இந்த முடிவினை எதிர்த்தது தனியார் பஸ் சங்கம்.
தற்போது ,மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பஸ்சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார,
பாதீட்டில் சொல்லப்பட்ட தண்டப்பணத்தை எதிர்க்கிறோம் .
சங்கத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார்.
‘’வீதியில் உயிரிழப்பு ஏற்படுகிறதென்றால் அதற்கு காரணம் பஸ் சாரதிகள் மட்டுமல்ல.
மோசமான வீதி அமைப்புகளும் தான் .’’ என்பதை குறிப்பிட்டார் .

string(1) "1"
Top