Nov 18, 2016

வெளிநாடு செல்ல ரோஹித்தவுக்கு அனுமதி

முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன 400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் வைத்திருந்தமை தொடர்பில்

உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை  என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்  குற்றம் சாட்டப்பட்டிருந்தார் .


இந்த வழக்கின் காரணமாக அவருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை இருந்தது .

ஆனால் ரோஹித்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை

ஜப்பானில் இடம்பெறும்  மத மற்றும் கலாசார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக  வேண்டி ,

1 மாதகாலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில்  மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கான விசாரணையின் போது,வெளிநாடு செல்வதற்கு ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு விடுக்கப்பட்ட தடையுத்தரவை

தற்காலிகமாக நீக்கிக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரதன,  இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
.

string(1) "1"
Top