Nov 19, 2016

வன்முறை செயல்களை தூண்டும் பௌத்த துறவிகளுக்கு எதிராக சட்ட நடவைக்கை எடுக்குமாறு கோரிக்கை Featured

நாட்டில் நடைபெறும் இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில்
367பேர் கையெழுத்திட்டு பொலிஸ்மா அதிபருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அந்த கடிதத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் மதத்தவர்கள் மீது பௌத்த பிக்குவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட
வன்முறை தாக்குதல்கள் தொடர்பில் போலீசார் செயற்படவில்லை என்று புகார் கூறும் நோக்கில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது .

இனத்துவேஷ நடவைக்கைகள், உரைகள் என்பற்றை தடுக்காமலும்

அதுபோன்ற குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருப்பது

பாரபட்சமானது என்பதையும் குறிப்பிட்டுள்ள அக்கடிதத்தில்
பல சமுக வலைத்தள  வீடியோ ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன .


சட்டத்தின் முன்னர் சமத்துவத்தின் அடிப்படை கொள்கையின் படி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த கடிதத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி
கோரிக்கை விடுத்துள்ளனர்

1)    நவம்பர் 15, 2016 அன்று ஞானசார தேரர் விடுத்த கூற்றுகளுக்காக அவரை உடனடியாக கைது செய்க. அது இன முறுகல்களுக்கு எண்ணெய் வார்த்து எண்ணிக்கை ரீதியலே சிறுபான்மையான மத மற்றும் மொழியினங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி அச்சுறுத்துவதாய் இருக்கிறது. ஞானசார தேரரின் முன்னைய நடத்தைகள் தொடர்பில்  பகிரங்க தளத்திலே போதியளவு சான்றுகள் உள்ளன. அத்துடன் ஜுன் 2016 இலே அளுத்கம அச்சுறுத்தலை மீளவும் செய்விப்பதாக விடுத்த அறிக்கை தொடர்பிலே ஏற்கெனவே சட்ட முறைமையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

2)    மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமங்கலே தேரரை, சட்டத்தைப்பற்றி எள்ளளவும் கரிசினை கொள்ளாத விதத்திலே அமைந்த அவரது பல்வேறு இனத்துவேஷச பேச்சுகளுக்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே இழைத்த வன்முறைகளுக்காகவும் உடனடியாகக் கைது செய்க. நாம் மேலே சுட்டிக்காட்டிய வீடியோக்கள் அதற்கு ஆதாரம்.

3)    இதர அனைத்து தீவீரக் குழுக்களையும் நபர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் விசாரணை செய்து சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4)    அளுத்கம சம்பவத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பிலே ஞானசார தேரர் விடுத்த அச்சுறுத்தல் பற்றி இலங்கை முஸ்லீம் கவுன்சில் (விசிஷிலி) செய்த புகாரின்பேரில் மேற்கொண்ட நடவடிக்கையின்  நிலைமை தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

5)    எண்ணிக்கையளவிலே சிறுபான்மையினரான மொழியின மற்றும் சமயத்தவர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை மேற்கொண்டுவரும் குழுக்கள், குறிப்பக சமூகததிலே வகிக்கும் ஸ்தானம் மற்றும் விதிவிலக்குகள் போன்வைகளால் தலைமையேற்று முன்நடத்தக்கூடிய பௌத்த பிக்குகள், ஏற்படுத்தக்கூடிய மொழியின மற்றும் மத வன்முறைகளின் சாத்தியத்தை எதிர்காலத்திலே தவிர்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலே பொதுமக்களுக்குத் தகவலறிவை வழங்குதல்.

string(1) "1"
Top