Nov 21, 2016

விரைவில், நிறம் மாறும் வீதிக்கடவைகள் Featured

இலங்கையில், மஞ்சள் நிறத்தில் உள்ள  வீதிக் கடவைகளை வெள்ளை  நிறத்தில் மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளனர்

அடுத்தவாரம் முதல் வெள்ளை நிற வீதிக்கடவைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக  வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் முதற் கட்டமாக கொழும்பில் ஆரம்பிக்கப்படும் புதிய வீதி வேலைத்திட்டங்களில் வெள்ளை நிற கடவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
அதன் பின்னர் மெல்ல மெல்ல ஏனைய மாகாணங்களுக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது 

பனி சூழ் நாடுகளாக மேற்குலக நாடுகளில் மட்டுமே மஞ்சள் கடவைகள் உண்டு

ஏனைய ஆசிய நாடுகளில் எப்போதும் வெள்ளை கடவைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன .

ஆதலால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.

string(1) "1"
Top