Nov 23, 2016

25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதி Featured

நாடுமுழுவதும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை
அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது .


இந்த கோரிக்கையை அரசிடம் கையளிக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பாக தெரிவித்த போது ‘’நாடு முழுவதும் இளைஞர்கள் பாடசாலை கல்வியை முடித்த பின்னர்

முச்சக்கரவண்டி ஓட்ட முற்படுவது அதிகரித்துள்ளது . ஆயிரத்துக்கும் மேற்பட்ட 25 வயதுக்கு குறைவானோர் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுள்ளனர் .

இதனால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதோடு மக்களின் வீதிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதை தவிர்க்கவே 25வயதுக்கு மேற்பட்டோருக்கு சாரதி அனுமதிபத்திரம் வழங்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டனர்
.

string(1) "1"
Top