Nov 23, 2016

வடமாகணத்தில் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்க, நோர்வேயும் சர்வதேச தொழில் அலுவலகமும் உடன்படிக்கை

வட மாகாணததில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கு நோர்வேயும் சர்வதேச தொழில் அலுவலகமும் கைகோர்க்கின்றன

நோர்வே ,சர்வதேச தொழில் அலுவலகம் ஆகியன வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டன. இந்நிகழ்ச்சித்திட்டமானது போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மாவட்டங்களில் அடித்தட்டு நிலையில் தேவைப்படுகின்ற உடனடித் தேவைகளான பண்பான தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்டது.

இவ்வுடன்படிக்கையில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் துர்பியோன் கவுஸ்தத்சேத்த மற்றும் சர்வதேச தொழில் அலுவலக இலங்கைக்கான பொறுப்பதிகாரி இந்திரா துடாவ ஆகியோர் கைச்சாத்திட்டனர். இவ்வுடன்படிக்கையின் மூலம் நோர்வேஜிய அரசின் நிதியுதவியுடன் சர்வதேச தொழில் அலுவலகம் முதன்மையான உற்பத்தியில் ஈடுபடும் சமூகங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான பங்காண்மைகளை உருவாக்குவதன் மூலம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்தியை அதிகரித்து இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்டங்களில் குடும்பங்கள் நின்றுநிலைக்கக்கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.

11 மில்லியன் நோர்வேஜியன் குரோனர் (200 மில்லியன் இலங்கை ரூபாய்) நிதியுதவியின் கீழ் இரண்டாண்டுகளுக்கான நிகழ்ச்சித்திட்டமானது நேரடியாக 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பெரிய வேளாண் சார் கம்பெனிகள், பழ மரக்கறி மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் இடையில் கூட்டுமுயற்சிகள் போன்ற புதிய வியாபார மாதிரிகளை உருவாக்கிப் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை நிலைமாற்றத் துணைபுரிகிறது. மரக்கறி மற்றும் பழங்கள் சார் துறையின் கீழ் நிகழ்ச்சித்திட்டமானது சாத்தியமான ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகளை உடைய பல்வேறு பழங்கள், இலை வகைகள் மற்றும் மூலிகை உற்பத்திகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. மீன்பிடித்துறையின் கீழ் கடலுணவை ஏற்றுமதி செய்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்தல் முக்கிய நோக்காகும்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கூட்டுறவுச்சங்கங்கள் அங்கத்தினருக்கு நன்மை பயக்கக்கூடியவகையில் தனியார் துறையுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றக்கூடிய வண்ணம் வலுப்படுத்தப்படும். அதேவேளை நியாயவர்த்தகச் (கயசைவசயனந) சான்றிதழ் மற்றும் நின்றுநிலைக்கக்கூடிய மூலங்களுக்கான (ளரளவயiயெடிடைவைல ளழரசஉநன) சான்றிதழ் ஆகியவற்றைக் கூட்டுறவுச்சங்கங்கள் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதன் மூலம் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கான பெறுமதியை சந்தையில் அதிகரிப்பதற்கு வழியமைக்கப்படும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இடையீடுகளானவை 60% பெண்களையும் அதில் 30% தொடக்கம் 40% பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களையும் முன்னிலைப்படுத்துகின்றன.

உடன்படிக்கை கைச்சாத்திடும்போது 'நாட்டின் நல்லிணக்கத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நின்றுநிலைக்கக்கூடிய வாழ்வாதாரத்தையும் பொருளாதார வலுவூட்டலையும் வழங்குவது முக்கியமானதாகும்" என நோர்வேஜியத் தூதுவர் தெரிவித்தார்.

 

Norway1 600px 16 11 23

string(1) "1"
Top