Nov 23, 2016

முஸ்லீம் பெண்களுக்கு, 18 வயது வரைக்கும் கல்வி உரிமை வழங்க ஜே.வி.பி வலியுறுத்தல்

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் 12 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க அனுமதி உண்டு .


இதனால் 18 வயதிற்கு முன்னரே பல பெண்கள் திருமணம் செய்வதால்
அவர்களது பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுகிறது .
அவர்கள் கல்வியை இடைநிறுத்தி விட்டு குடும்ப வாழ்வில் ஈடுபடுகின்றனர்
முஸ்லிம் பெண்கள் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்றால் மாத்திரமே  முஸ்லிம் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்.
எனவே நாட்டில் வாழும் சிறுமிகள் அனைவருக்கும் 18 வயது வரைக்கும் கல்வியை வழங்குவது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும்.
சகலருக்கும் 18 வயது வரையில் கல்வி என்றக்கொள்கை முக்கியமானது.அதில் முஸ்லீம் மாணவிகளும் உள்ளடக்கப்படவேண்டும் .
ஒவ்வொரு முஸ்லிம் மாணவியின் கல்வியிலும் உரிமையை 18 வயது வரைக்கும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. எம்.பி வலியுறுத்தினார்.

string(1) "1"
Top