Nov 23, 2016

சமஷ்டி முறையே எமக்கு வேண்டும் Featured

“வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்” எனும் ஊடகவியலாளர் சந்திப்பு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.


எழுக தமிழ் தொடர்பில் தெற்கில் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில்,

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கருத்துக்களை தெரிவித்தார்
‘’இந்த நாட்டின் வடக்கு - தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.

எங்களுடைய கருத்துக்களை திரிவுபடுத்தி சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர்.

ஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்.
வடக்கு தெற்கு பிரச்சினையைப் பொறுத்தவரை மொழியும் மூன்றாம் தரப்பினர் அதனை பயன்படுத்திய விதமும் காரணமாகும் .
எழுக தமிழ் ஆனது, மக்களுக்கான ஓர் அமைப்பு. அதில், சமூக அக்கறை கொண்டவர்களே உள்ளனர்.

எனினும், அதன் நடவடிக்கையை தெற்கில் திரிபுபடுத்திக் கூறிவிட்டனர்.

வடக்கு மக்களின் அபிலாஷைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் நடவடிக்கையையே, நாம் முன்னெடுத்திருந்தோம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையிலும், சமஷ்டி முறையினையே நாம் முன்வைத்துள்ளோம்.

சமஷ்டியே எமக்குத் தேவை. ஒன்றிணைந்த நாட்டுக்குள், அதிகாரப் பரவலாக்கலே வேண்டும்.

அது தனி நாட்டுக்கான கோரிக்கை அல்ல. தமிழரசுக் கட்சியில்,

‘தமிழரசு’ என்ற பதத்தை, பெரும்பான்மையினத்தினர் தவறாக விளங்கிக்கொண்டு, ‘தனி நாடு’ என அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.
எமது சமஷ்டிக் கோரிக்கையை, அரசாங்கம் எந்தவிதத்தில் அணுகுகின்றது,

என்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர்தான், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி யோசிப்போம்.’’
என்று தெரிவித்தார் .

 

{youtube}
{/youtube}
string(1) "1"
Top