Nov 24, 2016

அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி

அமெரிக்க கடற்படை மற்றும்  இலங்கை கடற்படையினருக்கு இடையிலான  கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பமாகியுள்ளன.


இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் இருநாட்டு உறவை பலபடுத்தும் வகையிலும்

திருகோணமலை கடற்தளத்தில் கடற்படை கூட்டுப்பயிற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த  அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான

யு.எஸ்.எஸ்.சொமர்செற் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர் .

பின்னர்  இரு நாட்டு கடற்படையினர் இடையில் விசேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
இந்நிலையில் மூன்று நாட்கள் கடற்டை கூட்டுப் பயிட்சிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.
புதிய ஆட்சியின் பின்னர் 90க்கும் மேற்பட்ட வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top