Nov 24, 2016

இலங்கைப்பாராளுமன்றத்துடன் பங்காளித்துவத்தை ஆரம்பிக்கும் USAID Featured

2016, நவம்பர் 23 ஆம் திகதி : சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையமானது (USAID)

இலங்கையில் ஜனநாயக நல்லாட்சியையும் பொறுப்புடைமையையும் பலப்படுத்துவதற்காக நேற்று

ரூ. 1.92 பில்லியன் (13 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான ஒரு பங்காளித்துவத்தை இலங்கைப் பாராளுமன்றத்துடன் ஆரம்பித்துள்ளது.

இந்த வைபவத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய USAID
நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. அன்ட்ரூ சிசன் அவர்கள்,“சுயாதீன ஆணைக்குழுக்கள்,அமைச்சுக்கள் மற்றும் மாகாண  உள்ளுராட்சி அரசாங்கங்களிற்கான

எமது ஆதரவை இந்த செயற்றிட்டம் பரவலாக்கும்” என்று கூறினார். “எப்போதும் போல,அரசியல் மற்றும் தலைமைத்துவத்தில்

பெண்கள் மற்றும் ஆண்களினது, அத்துடன்,பிரதிநிதித்துவப்படுத்தாத குழுக்களின் சமமான பங்குபற்றலுக்கு நாம் ஆதரவளிப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மூன்றாண்டு ஜனநாயக நல்லாட்சியையும் பொறுப்புடைமையையும் பலப்படுத்தும் செயற்றிட்டமானது (USAID) அரசாங்கத்திற்குள்ளும்,

பாராளுமன்றத்தினுள்ளும் தந்திரோபாயத் திட்டங்களையும் தொடர்பாலையும் மேம்படுத்துதல்,

பொது வெளிபாட்டுத்தன்மையை பரவலாக்கல்,வினைதிறன் வாய்ந்த கொள்கை மறுசீரமைப்பு மற்றும் அமுலாக்கச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாராளுமன்றத்திலும்,

அனைத்து உள்ளுர் மட்டங்களிலும் பெண்களினதும்,பிரதிநிதித்துவம் செய்யப்படாத குழுக்களின் பங்குபற்றலையும் அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டுள்ளது.

கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் இத்தொடக்க நிகழ்வில் தலைமை வகித்திருந்தார் என்பதுடன்

அமைச்சரவை அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் மேற்பார்வை குழுக்களின் தலைவர்கள்,சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள்.
 
பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் பிரதான உறுப்பினர்களும் ஊழியர்களும்

இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இந்த மூன்றாண்டு ஜனநாயக நல்லாட்சியையும் பொறுப்புடைமையையும் பலப்படுத்தும் செயற்றிட்டமானது (SDGAP)

மனோசக்தி,அறிவு மற்றும் செயல்முறைகளைப் பலப்படுத்துவதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையுடன் USAID இன்

புதிய வெற்றிசார் செயற்பாட்டின் ஊடாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.

புதிய துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் ஊழியர்களின் இயலுமை கட்டியெழுப்பல்,பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை புதுப்பித்தல் என்பன

அண்மையில் பூர்த்தியான செயற்றிட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் அனைத்து மக்களும் நன்மை அடைவதற்காக விவசாய மற்றும் வியாபார அபிவிருத்தி,சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள்,கல்வி,சுகாதாரம்,நல்லாட்சி மற்றும் மனிதாபிமான உதவிகள்

ஆகிய துறைகளில் 1956 தொடக்கம் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

 

us1 670px 24 11 16

 

 

us2 670px 24 11 16

us3 24 11 16

string(1) "1"
Top