Nov 25, 2016

பேராசிரியர் G.L.பீரிஸு மீது விசாரணை ??? Featured

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது .

வெளிவிவகார, அமைச்சுக்கென 2010 - 2015ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியை, வரையறையின்றிச் செலவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே,

அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது ..  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைத்த முறைப்பாட்டின் பேரில்,

மேற்படி விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

 வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த 5 வருட காலப்பகுதியில் அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட பெரியளவிலான அனைத்து செலவுகள் பற்றியும்

விரிவான தகவல் 10 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று
தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சகல பிரிவுகளினதும் பிரதானிகளுக்கு கட்டளை  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

string(1) "1"
Top