Nov 28, 2016

இந்திய கடற்படை தளபதி இலங்கை வருகை

இந்தியாவின் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா  இலங்கைக்கு வருகை தந்துள்ளார்
5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையிலான கடற்பாதுகாப்பை அதிகரித்தல், பலப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இன்று  இந்திய கடற்படை தளபதி “ 2016 காலி கலந்துரையாடல்“ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும்
கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்குகொள்கிறார் என்பது முக்கியமான விடயமாகும் .
மேலும் ஜனாதிபதி, பிரதமர்  மற்றும் பாதுகாப்பு துறையின் முக்கிய உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

string(1) "1"
Top