Nov 28, 2016

புகைப்பொருள் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு எதிர்ப்பு

2020ஆம் ஆண்டளவில் இலங்கையை புகைத்தல் அற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


புகைப்பொருட்களுக்காக வரிகள் அதிகரிக்கப்பட்டும் புகைத்தலுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் இருக்கின்றன
பொது இடங்களில் புகைப்பிடித்தல் முற்றிலும்  தடைச்செய்யப்பட்டுள்ளது.
புகைப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் புகைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்,
ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாயை நன்கொடைவழங்கும்  தீர்மானமானது சட்டவிரோதமானது என்று,
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக  அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்“ உலக சுகாதார நிறுவனமானது 2003ஆம் ஆண்டு கைச்சாதிட்ட,
புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு மாநாட்டு கொள்கைக்கு அமைவாக,
புகைப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையை பெற்றுக்கொள்வது சட்ட விரோதமானது   
என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் .


வித்துள்ளார்
string(1) "1"
Top