Nov 30, 2016

அரசுப்பேரூந்து சாரதிகளின் விடுமுறை ரத்து

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

தனியார் பஸ் ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில்

மாணவர்களின் நிலை என்னவென்று விவாதிக்கப்பட்டது .
அரசாங்கமும் பரீட்சைகளுக்கு இடையூறு வராது என்று உறுதி கொடுத்தது .

இலங்கை அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பணியாற்றும்

அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும்
ரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது .

string(1) "1"
Top