Dec 01, 2016

சத்திரசிகிச்சையின் போது நால்வர் உயிரிழப்பு;விசாரணையை முன்னெடுக்கும் அரசாங்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  

இது தொடர்பில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான   ராஜித்த சேனாரட்னவிடம் கேட்டபோது

''இது தொடர்பில் நாங்கள்  ஆராய்ந்து பார்த்தோம்.இந்த சத்திரசிகிச்சைக்காக ஒருவிதமான சாயம் பயன்படுத்தப்படும்.
சம்பவ தினத்தன்று புதிய கையிருப்பு தொகுதியிலிருந்து பெற்றுக்கொண்ட சாயத்தை பயன்படுத்தியுள்ளனர்.
அந்த சாயம்தான்  ஒவ்வாமையை  ஏற்படுத்தி மரணத்தை சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
 வட கொழும்பு, யாழ்ப்பாணம், கராப்பிட்டிய, பதுளை, களுத்துறை, குருநாகல் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு இந்த சாயம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சாயத்தைப் பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்தியுள்ளோம்
நான் உடனடியாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரை  தொடர்புகொண்டு விடயத்தை ஆராய்ந்து பார்க்குமாறு கூறினேன்.
அவரிடமிருந்து ஒரு அறிக்கையொன்றையும் பெற்றுக்கொண்டேன்.
முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.'' என்று  சுகாதார அமைச்சர்  தெரிவித்தார்.

string(1) "1"
Top