Dec 01, 2016

25,000 தண்டப்பணத்தில் மாற்றமில்லை Featured

இன்று நள்ளிரவு முதல் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் பஸ் மற்றும் ரயில் சேவை ஊழியர்கள்.

போக்குவரத்து விதிகளை மீறும் ஏழு விதமான குற்றங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள  25 ஆயிரம் ரூபா  தண்டப்பணத்தை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுபற்றி கருத்துதெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன  ''இவ்வாறு  ஏழு விதமான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் விதிக்குமாறு  பரிந்துரையை முன்வைத்ததே  நான்தான்.
நாட்டில்  பாரியளவில் விபத்து சம்பவங்கள், மரணங்களும் இடம்பெறுகின்றன.அதிகரித்து செல்கின்ற விபத்து சம்பவங்களை குறைக்கவேண்டிய தேவையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது
25 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் எக்காரணம் கொண்டும்  மீளப்பெறப்படமாட்டாது. இதில் திருத்தம் கொண்டுவரவும் மாட்டோம்.  உரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு  
இந்த சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில்  நிறைவேற்றுவோம் '' என்று தெரிவித்தார்

string(1) "1"
Top