Dec 02, 2016

இலங்கையின் வர்த்தக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அமெரிக்க -இலங்கை நிபுணர்கள் சந்திப்பு

இலங்கையின் வர்த்தக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அமெரிக்க -இலங்கை நிபுணர்கள் சந்திப்பு இடம்பெற்றது

நவம்பர் 29ஆம் திகதி முதல்,டிசம்பர் 1ஆம் திகதி வரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமானது, அமெரிக்க வாணிபத் திணைக்களம் மற்றும் இலங்கை வாணிபத் திணைக்களத்துடன் இணைந்து,இலங்கை அமைச்சுக்கள்,நிறுவனங்கள்,ஆய்வு கல்வி நிறுவனங்கள்,வர்த்தக கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த 70இற்கும் மேற்பட்ட பிரதான தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுடன்,வர்த்தக கொள்கை தொடர்பில் மூன்று கருத்தரங்குகளை நடத்தியது.

இலங்கை நிறுவனங்களின் வர்த்தக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு உதவுவதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை என்றும் எதிர்பார்த்திருக்கலாம்என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்கள் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கான இந்த அமர்வுகளில் தொகைசார் வர்த்தக கொள்கை பகுப்பாய்வில் திறன்கள் அபிவிருத்தி, வர்த்தக பேரம் பேசல் மூலோபாயங்களில் கலந்துரையாடல் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக கொள்கையின் உருவாக்கத்திற்கான ஆற்றல் குறித்த கலந்துரையாடல் என்பன உள்ளடங்கியிருந்தன.

வர்த்தக விழுமியத்தினை அடைவதற்கு ஒரே சவால்கள்,ஒரே தொழில்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் நட்புறவுமிக்கவர்களால் சூழ்ந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றதுஎன சர்வதேச வர்த்தக நிர்வாகத்தில் அமெரிக்க வாணிக திணைக்களத்தின் பேரம் பேசல்கள் அணியின் தலைவர் கேட்ரிஸ் கெலி தெரிவித்தார்.

வர்த்தக பேரம் பேசல்கள் மற்றும் பகுப்பாய்வுக்கான அமெரிக்க சர்வதேச வர்த்தக நிர்வாக அலுவலகம்,சர்வதேச வர்த்தக நிலையம், மற்றும் உலக வங்கியின் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த மூன்று நாள் செயலமர்வில் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகள் சந்தை பகுப்பாய்வு,பொருளாதார மாதிரி,வர்த்தக மூலோபாய விருத்தி மற்றும் பொது-தனியார் கூட்டுறவு என்பன தொடர்பில் கவனம் செலுத்தின.

பொது ஊழியர்கள் என்ற வகையில் தொடர்ந்தும் வர்த்த கொள்கை உருவாக்கத்தில் அனைத்து பங்குதாரர்களுடனும் கற்றல் மற்றும் கலந்தோசித்தலுக்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்என இலங்கை வாணிபத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜேரட்ன தெரிவித்தார்.

 

USe1 600xp 16 12 02

string(1) "1"
Top