Dec 02, 2016

சேவையில் ஈடுபட்டுவரும் பேரூந்துகள் மீது தாக்குதல் Featured

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகையில் அரசுப் பேரூந்துகள் கடமையில் ஈடுபட்டுவருகின்றன.
 
இன்று காலை அரசுபேருந்துகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 20 பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தபட்டதாகவும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் இலங்கை போக்குவரத்துச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தனியார் பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தற்போது தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

கேகாலை அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

string(1) "1"
Top