Dec 03, 2016

கடந்த ஆட்சியில் பாரிய அரிசி மோசடி!!! Featured

பாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது
கடந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி சம்பவமொன்றை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்நெத்தி தெரிவித்தார் .

இது பற்றி கூறும்போது ''கடந்த ஆட்சிக்காலப்பகுதியில் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து 46,698 மெற்றிக் தொன் அரிசி மட்டும் கொள்வனவு செய்யப்படுகையில்
வெளிநாட்டிலிருந்து 2,75,693 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 9734 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
திறைசேரி பிரதி செயலாளரினால் சதொசவுக்கு அனுப்பிய கடிதத்தில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் பொன்னி அரிசியும் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசியும்
இந்திய ஏ.சி.பி நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.
திறைசேரி இதற்காக 591 கோடி பெறுமதியான வங்கி கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் பெரும் மோசடி இடம் பெற்றுள்ளது.
அத்தோடு இந்த அரிசி 10 மாதங்கள் சுங்கத்திலும் 9 மாதங்கள் தனியார் களஞ்சியத்திலும் வைக்கப்பட்டிருந்தது.
809 கொள்களன்கள் எதுவித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.
அரிசி அனுப்பிய கம்பனி இரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பனியாகும்.
மேலும் 60ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதோடு பங்களாதேஷிலிருந்து 25 ஆயிரம் மெற்றிக்தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 251,210 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
18,597 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கிலோ 75 ரூபா வீதம் தருவிக்கப்பட்ட பொன்னி அரிசி 60 ரூபாவுக்க விற்கப்பட்டுள்ளது
உணவுக்கு உகந்ததல்ல என 38 ரூபா படியும் அரிசி விற்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2359 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பயன்படுத்தக் கூடிய அரிசி விலங்கு உணவுக்கு என 38 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.'' என்று கூறினார்

குறித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்
''இந்த அரிசி பாவனைக்கு உகந்ததா அல்லது இல்லையா என ஆராய குழு அமைத்தேன்.
உணவுக்கு உகந்தது என அறிவிக்கப்பட்டது.
திறந்த கேள்வி மனு கோரலில் 75 ரூபாவிற்கு வாங்க முன்வந்தனர்.
ஆனால் சுகாதார பரிசோதகர்களும் வேறு தரப்பினர் களஞ்சியத்தை சீல் வைத்தனர்.
நாம் நீதிமன்றம் சென்றோம்.
அதன்போது அரிசியை விற்பனை செய்யாது பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த பரிசேதனையின் பிரகாரம் உணவிற்கு இந்த அரிசி உகந்ததல்ல என நீதிமன்றம் அறிவித்ததோடு
விலங்கு உணவாக விற்குமாறும் பணிக்கப்பட்டது.
அமைச்சரவை குழுவின் முடிவின் படி 38 ரூபா படி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனது தேவைப்படி ஒரு கிலோ கூட விற்கப்படவில்லை.
தற்போது இந்த இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பாக மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவும்
ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

string(1) "1"
Top